அரிசி விலைகளில் திடீர் அதிகரிப்பு

201904131035011734 Rice exports declined by 94 in 11 months SECVPF
201904131035011734 Rice exports declined by 94 in 11 months SECVPF

நாட்டில் நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சூழலில் அரிசியின் விலைகள் அதிகரித்துள்ளன.

98 ரூபாவிற்கு காணப்பட்ட நாட்டரிசி கிலோ ஒன்று தற்போது 120 முதல்125 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

84 மற்றும் 85 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி 100 முதல் 115 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ சம்பா அரிசி 155 முதல் 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் கீரி சம்பா 215 முதல் 220 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

எனவே இந்த விலையேற்றம் தொடர்பில் அரசாங்கம் பொதுமக்கள் சார்பாக தீர்மானங்களை மேற்கொள்ள முன்வரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.