ஒரே பிரதேசத்தில் பெறப்பட்ட 100% மாதிரிகளில் டெல்டா திரிபு

1623060804 7427
1623060804 7427

தெமட்டகொட ஆராமய வீதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறு பீ சிஆர் பரிசோதனைகளில் மொத்தமாக பெற்றுக்கொண்ட மாதிரிகள் தொடர்பில் முன்னெடுத்த ஆய்வுகளுக்கமைய, ஒரே பிரதேசத்தில் தாம் எழுமாறாக பெற்ற 5 மாதிரிகளுமே டெல்டா திரிபை கொண்டவர்களினுடைய என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனைவிட கராப்பிட்டிய, மட்டக்களப்பு, கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்குட்பட்ட கொழும்பு 6,8 மற்றும் 10 ஆகிய பகுதிகளிலும் எழுமாறாக பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. எனினும், அவற்றில் எவ்வித விசேட நிலைமைகளும் கண்டறியப்படவில்லை.

ஒரே பிரதேசத்தில் பெற்றுக்கொண்ட 100 சதவீதமான மாதிரிகளில் ஒரே வகையான திரிபு கண்டறியப்படமையானது மிகவும் ஆபத்தான நிலைமை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய திரிபு அல்லது டெல்டா ( பி.1.617.2) அதிவேகமாக பரவக்கூடியதுடன், பாரதூரமான நோய் நிலைமைகளை ஏற்படுத்தவும் கூடியதென்பதால் நிலைமை மேலும் சிக்கலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.