ஏப்ரல் 21 தாக்குதல்: தொடரும் மிரட்டல் அழைப்புகள்!

telefone da caixa economica federal
telefone da caixa economica federal

ஏப்ரல் – 21 தாக்குதல் சம்பவத்தை மையமாக கொண்டு இனந்தெரியாத நபர்களால் தொலைப்பேசி அழைப்புக்கள் ஊடாக பணம் கேட்டு மக்களை மிரட்டும் சம்பவங்கள் மீண்டும் பதிவாக ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 50 சம்பவங்கள் இலங்கை முழுவதிலும் பதிவாகியுள்ளதோடு நேற்று மாத்திரம் 3 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அழைப்புக்கள் பெரும்பாலும் நிலையான அழைப்புக்களின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்களை காரணம் காட்டி மக்களை மிரட்டி வங்கி கணக்குளில் ஒரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறு குறித்த அழைப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புக்கள் தொடர்பில் எவ்வித அச்சமுமின்றி காவல்துறைக்கு அறிவிக்க வேண்டும்.

அதேவேளை எந்த காரணம் கொண்டும் குறித்த அழைப்புக்களில் வழங்கப்படுகின்ற தகவலை கொண்டு வங்கி கணக்குகளில் பணத்தை வைப்பிலிட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.