ஜூன் 21 தளர்கின்றது பயணத் தடை – இராணுவத் தளபதி புதிய அறிவிப்பு

ஜெனரல் ஷவேந்திர சில்வா 1 1 2
ஜெனரல் ஷவேந்திர சில்வா 1 1 2

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணத் தடை தொடர்பில் புதிய அறிவிப்பொன்றைக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படுகின்றது என அவர் அறிவித்துள்ளார்.

அதேநேரம் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத் தடை அமுலாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பயணத் தடை தளர்த்தப்படும்போதும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடானது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் ஒன்றுகூடல்கள், பொது நிகழ்வுகள் உள்ளிட்டவற்ருக்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.