கொரோனா பாதிப்பு ; அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம்

moh area map 700x375 1
moh area map 700x375 1

கடந்த 14 நாட்களுக்குள் அதிகளவிலான கொரோனா தொற்று நோயாளிகள் பதிவாகிய இடங்களை இலங்கையில் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் அதிகளவில் பதிவாகிய நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறித்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முசலி, பலுகஸ்வேவ, சேருவில, செங்கலடி, காரைதீவு தெற்கு மற்றும் லொஹுகல போன்ற சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் மாந்தை கிழக்கு வெலிஓயா போன்ற பகுதிகளில் அதிகளவிலான கொரோனா தொற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.