புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்!

VideoCapture 20210620 111305
VideoCapture 20210620 111305

புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி யாழ்ப்பாணம் – நவாலியில் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரத்து16ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், உலக வங்கியின் “ஐ” செயற்றிட்டத்தின் கீழ் தற்போது புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நவாலி- ராஜ ராஜேஸ்வரி வீதியை முழுமையாக செப்பனிட்டு தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

VideoCapture 20210620 111310

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

இந்த ராஜ ராஜேஸ்வரி வீதியானது, சி.பி.எம். வீதியிலிருந்து கொத்துக்கட்டி வீதி வரை புனரமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த வீதியானது சி.பி.எம். வீதியிலிருந்து கோவில் வீதிவரை புனரமைக்கப்படுகிறது.

“ஐ” செயற்றிட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் இவ் வீதியால், உலக வங்கிக்கோ அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கோ அல்லது மானிப்பாய் பிரதேச சபைக்கோ நற்பெயர் ஏற்பட வேண்டும் என்றால், உலக வங்கியின் நிதியைப் பெற்று குறித்த வீதியின் மிகுதி வேலைகளையும் பூரணப்படுத்த வேண்டும்.

VideoCapture 20210620 111301

இவ் வீதியானது அராலி, மூளாய் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான வீதியோடு இணைகிறது. ஆகையால் இவ் வீதியினை பல மக்கள் பயன்படுத்துகின்றனர்.


மழை காலத்தில் இவ் வீதியால் பயணம் செய்பவர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிரிகொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த விடயத்தில் கரிசினை காட்டி புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி 200 மீட்டர் நீளமுள்ள வீதியினையும் புனரமைப்பில் உள்ளடக்க வேண்டும்-என்றனர்.