தொழில்துறை உருவாக்கம் தொடர்பில் கலந்துரையாடல்

0000
0000

வடக்கு மாகாணத்தில் தொழில் துறைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை உருவாக்குவது தொடர்பில் இந்திய துணை தூதுவர் பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் கடல்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு நேற்றைய தினம் அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது வடக்கில் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு ஏற்ற தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான ஏதுநிலைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக கடல் வளம் சார் தொழில்துறைகளை ஊக்கவிப்பதுடன் கடல்சார் வளங்களை பயன்படுத்தி கடல்பாசி வளர்ப்பு, மற்றும் பனை வளத்தை மூலதனமாகக் கொண்ட சிறுதொழில் முயற்சிகளை கண்டறிந்து வடக்கிலுள்ள தொழில் வாய்ப்பு அற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதுடன் தகவல் தொழில்நுட்ப துறையை வடக்கில் மேம்படுத்தி அதனூடாக பல வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.