அரிசி இறக்குமதி செய்யுமாறு வலியுறுத்தல்

dadly sirisena
dadly sirisena

நாட்டில் நிலவுகின்ற அரிசி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கு வெளிநாட்டிலிருந்து போதியளவு அரிசியை இறக்குமதி செய்வதே தீர்வாகும் என அரலிய அரிசி வர்த்தக அமைப்பின் தலைவர் டட்லி சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

அரிசி உற்பத்தியை அதிகரிக்க நாட்டரிசி, சம்பா அரிசி என்வற்றுக்கான நெல் எமது சந்தையில் காணப்படாதுள்ளமை பெரும் பிரச்சினையாகும். வரையறுக்கப்பட்ட அளவு நெல்தான் சந்தையில் உள்ளது.

குறைபாடாகவுள்ள நெல்லை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதே சிறந்தது. தற்பொழுது நாட்டிலுள்ள நெல் சந்தைக்கு வருவதற்கு இன்னும் இரு மாதங்கள் எடுக்கும். இது இவ்வாறிருக்கையில், நாளுக்கு நாள் இந்த நெருக்கடி அதிகரிக்கும்.

உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படாதவகையில் எந்தவொன்றையும் முன்னெடுப்பதே நல்லது எனவும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.