யாழில் மின்சார கட்டணம் செலுத்தச் சென்றவர்களை உள்ளே விடாத பாதுகாப்பு உத்தியோகத்தர்

22beac75eefa2c2c02b038b94308e123 XL
22beac75eefa2c2c02b038b94308e123 XL

மின்சார கட்டணம் செலுத்தச் சென்ற பொதுமக்களை உள்ளே விடாது பாதுகாப்பு உத்தியோகத்தர் தடுத்து நிறுத்தியதை கேள்வியுற்று ஊடகவியலாளர்கள் அங்கு வந்த போது உடனே பொதுமக்களை உள்ளே அனுமதித்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியிலுள்ள இலங்கை மின்சார சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

மிகநீண்டகாலமாக இருந்த பயணத்தடை தளர்த்தப்பட்ட நிலையில் மின்சார கட்டணங்களை செலுத்துவதற்காக பொதுமக்கள் மின்சார சபைக்கு சென்றனர்.

அங்கு மின்சார கட்டணங்களை செலுத்த முடியாது, அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் செலுத்துமாறும் காசோலை கொடுப்பனவு மட்டும் செலுத்த முடியும் என்று கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இதனால் நீண்ட தூரத்திலிருந்து வந்த பொதுமக்கள் விசனத்துடன் சென்றதைப் பார்த்த ஊடகவியலாளர்கள் மின்சார கொடுப்பனவு பீடத்திற்கு பொறுப்பான பொறியியலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது மின்கட்டணத்தை செலுத்தலாம் என கூறினார்.

இதனையடுத்து வெளியில் காத்திருந்த பொதுமக்களை உடனே உள்ளே அனுமதித்து மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.