சீரற்ற காலநிலை -அம்பாறை மக்கள் பாதிப்பு

ampara2
ampara2

அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் மழைவீழ்ச்சி ஏஏற்பட்டுள்ளமையின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

அன்னமலை, நாவிதன்வெளி பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை இணைக்கும் எல்லைக் கிராமங்களான 15ம் கிராமம் வேப்பையடிக்கும் தம்பலவத்தைக்குமிடையில் வீதியில் காணப்படும் பாலம் ஓரிரவு மழைக்கே அதிகளவில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதனால் பொதுமக்களின் போக்குவரத்து அடிக்கடி தடைப்படுகின்றது.

மண்டூர் பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பயணிக்கும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் அதே போல மட்டக்களப்பு நோக்கி இவ்வீதியால் பயணிக்கின்ற பயணிகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே இது தொடர்பில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தி குறித்த பாதையினையும் பாலத்தினையும் புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.