நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்தது

corona death 3
corona death 3

நாட்டில் நேற்று 28.06.2021 கொரோனா தொற்றால், மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்று பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , டெல்டா உள்ளிட்ட ஏனைய நிலைமாறிய வைரஸ் பரவல் காணப்படுகிறதா என்பது தொடர்பில் கண்டறிவதற்கு சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கமைய நாடளாவிய ரீதியில் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மாதிரிகளைப் பெற்று மரபணு பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை காலை 6 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன. அதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிங்கபுர கிராம சேவையாளர் பிரிவின் சங்ஹிந்த செவண தவிர்ந்த ஏனைய பகுதிகள் மற்றும் கம்பஹா மாவட்டத்தின் களனி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்பொரளை 100 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, நுவரெலியா, கம்பஹா, காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 11 பகுதிகளும் , அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை காவல்துறை பிரிவின் புதிய வளத்தாப்பிட்டி கிராமம், மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவின், மீராவோடை கிழக்கு 207, மீராவோடை மேற்கு 207 டீ, மாஞ்சோலை பதுரிய 207 டீ கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை களுதமத, ஹப்புகஸ்தலாவ, வீரபுர மற்றும் கீழ் கொறக்க ஓய கிராம சேவையாளர் பிரிவுகளும் பியகம காவல்துறை பிரிவின் சில பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்கிழமை மாலை 7 மணி வரை 1320 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் நாட்டில் 256 828 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. இவர்களில் 221 249 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 32 635 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.