அரிசி விலை தொடர்பான அவசர சட்டம் விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்

6bbb91ca bandula 850x460 acf cropped 850x460 acf cropped
6bbb91ca bandula 850x460 acf cropped 850x460 acf cropped

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றவர்களுக்கான அபராதத் தொகையை 100,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான சட்டமூலம், அவசர சட்டமூலமாக நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைச்சரவை இரண்டு தடவைகள் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தநிலையில் குறித்த சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சட்டமா அதிபரின் அங்கீகாரத்தின் பின்னர் அது அவசர சட்டமூலமாக நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உரத் தட்டுப்பாடுக்கு தீர்வு கோரி இன்றும் நாட்டின் பல இடங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினார்கள்.

கெக்கிராவை, இபலோகம, பலாகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கெப்படிபொல பிரதேசத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.