கண்ணீருடன் வெளியேறினார் செரீனா

QVJZC5HT7VMWFPJJPU3STFJDKA
QVJZC5HT7VMWFPJJPU3STFJDKA

23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் 2021 விம்பிள்டன் தொடரிலிருந்து கண்ணீருடன் வெளியேறியுள்ளார்.

விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2021 விம்பிள்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டமொன்றில் பெலாரஸ் நாட்டின் அலைக்சண்ட்ரா சாஸ்னோவிச்சை எதிர்கொண்டார்

ஆட்டத்தின் இடையே செரீனாவின் கால் சறுக்கியதால், இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார் அவர்.

சிறிய முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து விளையாட முயற்சித்தார். 34 நிமிடங்கள் ஆடி 3-3 என்ற கணக்கில் ஆட்டம் இருந்த நிலையில் வலி அதிகமானதால் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் செரீனா.

இதனால் நடப்பு விம்பள்டன் தொடரின் முதல் சுற்றில் கண்ணீர் உணர்வுடன் செரீனா, சாஸ்னோவிச்சுடன் கைகுலுக்கி போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் செரீனா.

இதன் மூலம் 8 ஆவது முறையாக விம்பிள்டன் மற்றும் 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வதற்கான செரீனாவின் கனவும் கலைந்தது.

“எனது வலது காலில் காயம் ஏற்பட்ட பின்னர் இன்று பின்வாங்க வேண்டியிருந்ததை எண்ணி நான் மனம் உடைந்தேன்” என்று செரீனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.