மட்டக்களப்பில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

IMG 20210630 111802
IMG 20210630 111802

நாடளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத்தடையால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வாழ்வாதரத்தை இழந்த மக்களுக்கு பல்வேறுபட்ட அமைப்புக்களால் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கனடா தளிர் ஊடகம் மற்றும் சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கழகத்தின் நிதி பொறுப்பாளரும் மாவட்ட கிளை தலைவருமான சி.தமிழினி தலைமையில் கழகத்தின் கல்குடா கிளை பொறுப்பாளரும் ஊடகவியலாளருமான ந.குகதர்சன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குறித்த சில பிரதேச வாழ் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் மட்டக்களப்பு கிளையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்தோடு கனடாவில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் வீடு விற்பனை முகவர் கென் கிருபாவின் பிறந்த நாள் அன்பளிப்பு நிதி மற்றும் தொழில் அதிபர்களான தாஸ் சன்முகலிங்கம், கனகாம்பிகை நகை மாளிகை கோபால் நடா, மற்றும் கென்வேஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லோகன் ராசையா வீடு விற்பனை முகவர் ராஜ்குமார் ராசையா ஆகியோரால் நாடளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்டிருந்த பிரயாணத்தடையால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வாழ்வாதரத்தை இழந்த மக்களுக்கு இவ் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது இன்றும் தொடராக நல் உள்ளங்களின் ஆதரவுடன் இடம் பெற்று வருகின்றது.