ஒருங்கிணைப்பு குழுத்தலைவராக பொறுப்பேற்றார் சந்திரகுமார்

as 300x245
as 300x245

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் பதவியேற்றுள்ளார்.

இதனையடுத்து இதுவரை அந்த பதவியைவகித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறித்த பதவியை இழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் நலன் சார்ந்த கிளிநொச்சி பொதுச்சந்தை ,பேருத்துநிலையம் உள்ளிட்ட அபிவிருத்திப்பணிகள் முழுமைபெறாதநிலையிலும் கம்பரேலியத்திட்டத்தினுடாக பல்வேறு விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டநிலையில் சிவஞானம் சிறிதரன் அந்தபதவியைஇழந்திருப்பதாகவும் சமூகஆர்வலர்களால் சுட்டிகாட்டப்படுகின்றது.

இதேவேளை புதிய அபிவிருத்திக்குழுத்தலைவர் மக்களின் வாழ்வாதரம் ,வங்கி ,நுண்நிதிக்கடன் உள்ளிட்ட மக்களின் அவசர அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தன்னுடைய பணியை ஆரம்பிக்க வேண்டும் எனவும் சமூகஆர்வலர்களால் மேலும் சுட்டிகாட்டப்படுகின்றது .

இதேவேளை புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர்களுக்கான வாகனம் மற்றும் அதற்கான எரிபொருள் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது .