வவுனியாவில் சதொச பணியாளர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா

IMG 20210702 171029 1
IMG 20210702 171029 1

வவுனியா நகரில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் சதொச பணியாளர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு சுகாதார பிரிவினரால் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் ஒரு தொகுதி முடிவுகள் இன்று (02) மாலை வெளியாகியிருந்த நிலையில் சதொச பணியாளர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரப்பகுதியில் பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, மில்வீதி, சந்தை உள்வட்ட வீதி போன்ற இடங்களில் திடீரென இராணுவம் மற்றும் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு அவ் வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றியோர், வவுனியா நகரிற்கு தேவைகளின் நிமித்தம் வருகை தந்தோர், மற்றும் வாகனச் சாரதிகள் என பல்வேறு தரப்பினரிடமும் சுகாதார பணியாளர்களால் பி.சி.ஆர் பரிசோதனை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்றையதினம் வெளியாகியிருந்த நிலையில் வவுனியா சதொச பணியாளர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய் தொற்றுக்குள்ளானவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வவுனியா நகரிற்கு பல்வேறுபட்ட இடங்களிலிருந்து வந்தவர்களுக்கே எழுமாற்றாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதிபடுத்தப்பட்டமையால் வவுனியா நகரம் மீண்டும் முடக்கப்படுமா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.