பிற்போடப்பட்டது சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

thumb large thumb large 123
thumb large thumb large 123

இன்றைய தினம் (02) நடத்தப்படுவதற்கு பிற்போடப்பட்டிருந்த சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் திகதி குறிப்பிடப்படாது பிற்போடுவதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமான 10 அணிகள் பங்கேற்கும் தொழிற்சார் சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரானது மே மாதம் 2 ஆம் திகதி வரை நடத்தப்பட்டது. இதன்போது கொவிட் 19 அச்சுறுத்தல் மீண்டும் தலைத்தூக்கவே, போட்டித் தொடர் ஜூலை 2 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் தொடர்ந்தும் கொவிட் 19 அச்சுறுத்தல் காணப்படுவதால், இப்போட்டித் தொடரை ஆரம்பிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, திகதி குறிப்பிடப்படாமல் பிற்போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து வீரர்களை மீண்டும் ஒருங்கிணைக்கச் செய்வது மிகவும் கடினமான காரியம் என அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

புள்ளிப் பட்டியலில் சீ ஹோக்ஸ் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது. ரெட் ஸ்டார் அணி 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் கொலம்போ எப்.சி. அணி 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. புளூ ஸ்டார், அப் கண்ட்றி லயன்ஸ், டிபெண்டர்ஸ், ரட்ணம், றினோன்,புளூ ஈகள்ஸ் , நியூ யங்ஸ் ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.