மனிதநடத்தைக் கோலத்தில் மனவெழுச்சிஈர்ப்புப் பருமன் செலுத்தும் தாக்கம்-மருத்துவர் யமுனாநந்தா

yamuna
yamuna

மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் சூழலின் நிலையில் தங்கி உள்ளது. ஈர்ப்புவிசையானது சூழலில் சடத்துவப் பொருட்களில் செல்வாக்குச் செலுத்துவதுபோல் உயிர்களின் உணர்வுகளிலும் அதாவது மனஎழுச்சியிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது என மருத்துவர் யமுனாநந்தா குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்…….

சடப் பொருட்கள் அவற்றின் திணிவிற்கும் அடர்த்திக்கும் ஏற்ப சூழலில் வெவ்வேறுநிலைகளிலும் இடங்களிலும் உள்ளது போல் உயிரினங்களின் வாழ்விலும் அவற்றின் இயக்கத்திலும் ஈர்ப்பு விசைகளின் தாக்கம் செல்வாக்குசெலுத்துகின்றது. மனிதர்கள் சமூகத்தில் வெவ்வேறு இடங்களில் குடியேறி வாழ்வதிலும் ஏனையவர்களுடன் உறவுகளைப் பேணுவதிலும் மனவெழுச்சிஈர்ப்புப் பருமன் செல்வாக்குச் செலுத்துகின்றது.


ஒரு தனிநபரின் மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் அவர் வாழும் சூழல் அதாவது அவரைச் சூழ்ந்துள்ள பொருட்களின் தன்மை இயற்கைத் தாவரங்கள் வீட்டின் கட்டமைப்பு என்பவற்றுடனான சுற்றம் சூழல் மனிதஉறவுகளில் தங்கி இருக்கும்.ஒருவரின் மனஎழுச்சிஈர்ப்புப் பருமனின் அளவின் அடிப்படையில் அவரின் நடத்தையும் வாழ்வியலும் அமையும்.
மனஎழுச்சி ஈர்ப்புபுலமானது வயதுடன் அதிகரிக்கும் தன்மையது. சிறுவர்களில் சிறிய பருமனாகவும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமையும்.வயதாகும் போது ஒருவருக்கு நிகரமன எழுச்சிஈர்ப்பு பருமன் அதிகமாகவும் அனுபவித்தஉணர்வுகளின் அடக்கத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் அமையும். இதனால் அவர்கள் உளநோய் நிலைக்குஆளாகலாம்.


தற்போதையஇத்தீநுண்மிப்பேரிடரும் மனித சமூகத்தை முடக்கி மனித வாழ்வியலை அசாதாரண சாதாரணமாக மாற்றிவிட்டது. இது ஒட்டு மொத்தமாக மனித குலத்தின் மனஎழுச்சி ஈர்ப்புபருமனில் பாரியதாக்கத்தினைஏற்படுத்திஉள்ளது. இவை புதியவாழ்க்கை முறைக்கு மனிதனை இட்டுசெல்கின்றன. இத்தகைய சூழலில் மனித நேயம் மிக்க சமூகச் செயல்கள் அருகும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கலாம். கூட்டான சமூக விரோதச் செயல்கள் அதிகரிக்கலாம். அண்மையமருத்துவ தொழிற்சங்க சேவைமறுப்புப் போராட்டங்கள் கூட்டானமன எழுச்சி ஈர்ப்புப்பருமன் பாதிப்புக்குஉதாரணமாகும். (AdverseImpact of Collective Emotional Gravity) என்றார்