மட்டக்களப்பில் 72 கைதிகள் உட்பட 116 பேருக்கு கொவிட்!

tkn prisinors dim
tkn prisinors dim

மட்டக்களப்பு மாவட்டத்தில், 72 கைதிகள் உட்பட 116 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து எழுமாறாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்படி, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருக்கும், களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, காத்தான்குடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் மூன்று பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கும், தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.