பயிற்றுவிப்பாளர் இன்றி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் டெஹானி

1622275016 tehani 2
1622275016 tehani 2

இலங்கையின் குறிபார்த்துச் சுடும் வீரர் டெஹானி எகொடவெல, பயிற்றுவிப்பாளர் இன்றி இந்தமுறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது பயிற்றுவிப்பாளருக்கான ஒலிம்பிக் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலே இதற்கான காரணம் என்று அறியமுடிகிறது.

இந்நிலையில், விளையாட்டுத்துறை அபிவிருத்தி சபையினால் இதுதொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்று தேசிய குறிபார்த்துச் சுடும் விளையாட்டு சம்மேளனத்துக்கும், தேசிய ஒலிம்பிக் குழுமத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர் தமது பயிற்றுவிப்பாளருடன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதன் ஊடாக, அவரது வெற்றி வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.