கொழும்பில் உள்ளோருக்கு இன்று முதல் பைஸர் தடுப்பூசி

pfizer vaccine 1
pfizer vaccine 1

கொவிட்-19 வைரசு தடுப்புக்கான அஸ்ட்ராஜெனெகாவின் முதல் டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு இதன் இரண்டாவது தடுப்பு மருந்தாக பைஸர் தடுப்பூசி இன்று முதல் ஏற்றப்படவுள்ளது.

அதற்கு அமைவாக இலங்கைக்குக் கிடைத்துள்ள 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் கொழும்பு 01 இருந்து கொழும்பு 15 வரையுள்ள 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொவிட்-19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்

தடுப்பூசி வழங்கப்படும் திகதி ,நேரம் மற்றும் இடம் தொடர்பான விபரங்கள் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

வைத்திய மத்திய நிலையங்கள் மற்றும் நடமாடும் நிலையங்கள் மூலமாக இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்படும்.