எதிர்வரும் தினங்களில் பொருட்களின் விலை குறைவடையும் சாத்தியம்

ird
ird

எதிர்வரும் தினங்களில் பொருட்களுக்கான விலை மேலும் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக இறைவரித் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வற் வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டதன் மூலம் எதிர்வரும் சில தினங்களில் மேலும் பல பொருட்களின் விலைகள் குறைவடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய காபந்து அரசாங்கத்தினால் வற் வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.