உதவி காவல்துறை பரிசோதகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு

Police
Police

உதவி காவல்துறை பரிசோதகர்கள் 16 பேருக்கு காவல்துறை பரிசோதகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இன்று (13) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச சேவைகள் ஆணைக்குழு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.