கின் கங்கையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்

1452
1452

கின் கங்கை அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களின் கீழ் நீர் வழிப்பாதையை தடை செய்யும் வகையில் தேங்கியுள்ள குப்பைகள் கடற்படை வீரர்களினால் அகற்றப்பட்டது.

கங்கையில் சாதாரணமாக பாயும் நீரினால் காவிச் செல்லப்படும் குப்பைகள் இந்த பாலங்களின் கீழ் தேக்கம் அடைகின்றன.

இதனால் கின் கங்கையின் நீரோட்டம் தடைப்பட்டு அது சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வழிவகுக்கின்றது.

எனவே, உடனடி நடவடிக்கைகளைத் தொடங்கிய தெற்கு கடற்படை சுழியோடி குழுக்கள், பாலங்களின் அடியில் தேங்கிய குப்பைகளை அகற்றியுள்ளனர்.