ஜோசப்பின் கைதுக்கு எதிராக ஐ.நா. வதிவிட பிரதிநிதியிடம் மகஜர் கையளிப்பு

teachers
teachers

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியிடம் ஆசிரியர் சங்கம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது.

கொழும்பில் ஆசிரியர் சங்கம் சார்பில் மேற்கொண்ட ஜனநாயகப் போராட்டத்தின்போது ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களைத் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் முல்லைத்தீவு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

குறித்த மகஜரை நேரில் கையளிப்பதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியன்த பெர்னாண்டோ மற்றும் உப தலைவர் எம்.எம்.சமீன் மற்றும் மத்திய குழு உறுப்பினர் எம்.எம்.எம். லுத்பி உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் சென்றிருந்தனர்.