கோடீஸ்வரனின் கருத்திற்கு உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் எதிர்ப்பு

abdul majeeth
abdul majeeth

ஜனாதிபதியின் வாக்குறுதிக்கமைய கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படா விட்டால் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இணைத்து போராடுவதற்கு தயாரா உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்த கருத்திற்கு உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கோடீஸ்வ‌ர‌னின் அச்சுறுத்த‌லுக்கு ப‌ய‌ப்ப‌ட‌க்கூடிய‌ முதுகெலும்ப‌ற்ற‌ ஜ‌னாதிப‌தி, பிர‌த‌ம‌ரை நாம் கொண்டு வ‌ர‌வில்லை எனவும் இவர்களின் அச்சுறுத்தலுக்கு ஜனாதிபதி பயப்படுபவரல்ல என தெரிவித்தார்.

அவ்வாறு கோடீஸ்வரன் மூலம் மக்கள் போராட்டம் இடம்பெறும் பட்சத்தில் தாம் அதற்கெதிராக மக்களை இணைத்து போராடவுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதிக்கெதிராக‌ ஆர்ப்பாட்ட‌ம் செய்து அச்சுறுத்தி க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தை த‌ர‌முய‌ர்த்த‌ முணையும் கோடீஸ்வ‌ர‌ன் நிச்ச‌ய‌ம் ஒரு ம‌ன‌நோயாளியாக‌ தான் இருக்க‌ வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சட்டத்துக்கு புறம்பாக உருவாக்கப்பட்டுள்ள கல்முனை உபசெயலகம் ர‌த்து செய்ய‌ப்ப‌ட்ட வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

கல்முனை உப செயலகத்தை ர‌த்து செய்ய‌ கோரி நீதிம‌ன்ற‌த்தில் ந‌சீர் ஹாஜி என்ப‌வ‌ரால் வ‌ழ‌க்கு தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌மை குறிப்பிடத்தக்கது.