காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விசேட உத்தரவு

images 6 1
images 6 1

தொற்றும் மற்றும் தொற்றா நோய்களை தடுக்கும் வகையில் காத்தான்குடி நகர சபையின் எல்லைக்குற்பட்ட பாடசாலைகளில் உள்ள உணவுச்சாலைகள் அனைத்தினையும் மூடிவிடுமாறு காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாடசாலை சிற்றுண்டிசாலைகளின் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார பிரிவிற்கும் பாடசாலையின் அதிபர்களுக்குமிடையிலான அவசர சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காத்தான்குடி பிரதேச கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி வலய கல்விப்பணிப்பாளர் ஏ.ஜீ.எம். ஹகீம் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல் நஸ்ருதீன், காத்தான்குடி தள வைத்தியசாலையின் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர், கொழும்பு தேசியவைத்தியசாலையின் வைத்தியர் அகமட் சியாம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிற்றுண்டிசாலைகள் மட்டுமே திறக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நகர சபை தவிசாளர் இதன்போது குறிப்பிட்டார்.