ஈஸ்டர் தாக்குதல் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை

IMG 20190712 082335
IMG 20190712 082335

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக  சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட  காத்தான்குடியைச் இருவருக்கு எதிராக போதிய சாட்சி இல்லாத காரணத்தால் வழக்கு தொடரமுடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அறிவிக்கப்பட்டதையடுத்து இருவரையும் இந்த வழக்கில் இருந்து புதன்கிழமை (14) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முற்றாக விடுவித்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். 

கடந்த 21.4.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்தவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய ஒருவரை கடந்த 2019 ஏப்பிரல் 28 ம் திகதியும்  அவ்வாறே கடந்த 2019 யூன் 20 ம்திகதி காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவரையும்  சந்தேகத்தில் கைது செய்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். 

இந்த நிலையில் இருவரையும் கடந்த 2020 ஓகட்ஸ் மாதம் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டு தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகி வந்துள்ள இருவரது வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரிடம் இருந்து இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர போதுமான சாட்சியங்கள் இல்லை என மட்டக்களப்பு நீதிமன்றிற்கும் காவல்துறையினருக்கும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்  நகர்வு மனு தாக்குதல் செய்யப்பட்டு வழக்கு எடுக்கப்பட்டதையடுத்து இருவரையும் நீதவான் ஏ.சி.எம் றிஸ்வான் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இருவருக்கும் எதிராக வழக்கிற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.