வைத்தியசாலைக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பு

kattankudi hos 1
kattankudi hos 1

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு Al noor charity Association நிறுவனத்தினால் 31 லட்சம் பெறுமதியான இரண்டு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

31 லட்சம் பெறுமதியான இரண்டு சிறுநீரக குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் இலங்கை Al noor charity Association நிறுவனத்தின் தலைவர் S. M.அலியார் அவர்களினால் காத்தான்குடி வைத்திய சாலை அத்தியட்சகர் M. S. M.ஜாபிர் அவர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் Al noor நிருவாகிகள் மற்றும் வைத்தியசாலை நிருவாகிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.