நீர்மட்டம் உயர்வினால் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

crocodilla
crocodilla

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக மட்டக்களப்பு, கல்குடா தொகுதியிலுள்ள ஆறுகள், குளங்கள் போன்றவற்றில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக ஒட்டமாவடி பிரதேச சபை தெரிவித்துள்ளது.

ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அப்பகுதிகளிலுள்ள வீதிகள், குடியிருப்புகள், ஆற்று நீரோடு சேர்ந்துள்ளன. இதனால், குறித்த பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றன.

எனவே குறித்த பகுதிகளில் நீராடுவதையும், தேவையற்ற நடமாட்டத்தில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதேவேளை, ஓட்டமாவடி பால ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவரை முதலை இழுத்துக்கொண்டு சென்றபோது அதனை கண்ட மற்றறையவர் பாதிக்கப்பட்டவரை கடும் போராட்டத்துக்கு மத்தியில் முதலையிடம் இருந்து காப்பாற்றிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.