வவுனியாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா

202104290412159145 Is Corona Virus Infection Highly Heart and Diabetic SECVPF
202104290412159145 Is Corona Virus Infection Highly Heart and Diabetic SECVPF

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தை சேர்ந்த மூன்று பேர் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (21) வெளியாகின.

அதில், காத்தார் சின்னக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், கோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும் என 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.