ஆசிரியர், அதிபர் தொழிற் சங்கத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

IMG 4218
IMG 4218

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை உடனடியாக தீர்க்குமாறு கோரி அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று (23) முன்னெடுக்கப்பட்டது. 

IMG 4230

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான குறித்த பேரணி அங்கிருந்து மணிக்கூட்டு சந்தியை அடைந்து மீண்டும் பழைய பேருந்து நிலையப்பகுதியை அடைந்தது ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர். 


இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதாக அரசாங்கம் சொல்லிக்கொண்டாலும் அதனை தீர்ப்பதற்கான எந்தவித நடவடிக்கையினையும் அரசு இதுவரை முன்னெடுக்கவில்லை. இதனால் எமது வாழ்க்கை செலவு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

IMG 4226


இதேவேளை ஜோன் கொத்தலாவல இராணுவ பல்கலைகழக சட்டமானது கல்வித்துறையில் இராணுவ தலையீடுகளை ஏற்படுத்துகின்ற அபாய நிலையை ஏற்படுத்தியுள்ளது. அது உடனடியாக நிறுத்தப்படுவதுடன், கல்வியினை தனியார் மயப்படுத்துவதை நிறுத்துமாறும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆசிரியர் உழைப்பை சுரண்டாதே?தரமான இலவச கல்வியினை விற்காதே, கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.