கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இரு சமூகத்தையும் குழப்புகின்றனர்- த.கலையரசன்

IMG 20210723 104403
IMG 20210723 104403

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இரு சமூகத்தையும் குழப்புகின்றனர். என்று தவராசா கலையரசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மீனவர்களின் படகுகளிலிருந்து ஆழ்கடலில் வைத்து களவாடப்படும் மீன்கள், சுருக்குவலைகள் தொடர்பில் இன்று (23) மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

குறிப்பாக தமிழ் தேசிய அரசியல் என்பது ஜனநாயகத்திற்கான,நீதிக்காக போராடுவது நிச்சயமாக மட்டு அம்பாறை மீனவர்கள் எதிர்நோக்கும்  பிரச்சினையைக்கு தீர்வை பெற்று தருவார்கள் .

தமிழ் தேசிய அரசியல் தமிழ் பேசும் இனம் எனும் அடிப்படையில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். வடக்கு கிழக்கு தமிழ் பேசும்  இருப்பு சம்மந்தமாகவும் இன்றும் பல விடயங்கள் சம்மந்தமாகவும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் எடுத்து கூறி வருகின்றோம் ஆனால் முஸ்லிம் அரசியல் வாதிகள் தடையாக உள்ளனர்.

தமிழ் பேசும் இனம் எனும் அடிப்படையில் இரு சமூகங்களுக்கும் ஒற்றுமை அரசியல் வாதிகள் இடையே குறைவாகவே உள்ளது.

கல்முனையில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உள்ளது . இதனாலே தமிழ் பேசும் மக்களிடையே பிரிவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.