மட்டக்களப்பில ரெலோ காரியாலயத்தில் யூலை படுகொலை நினைவேந்தலுக்கு தடை!

20201104 071605
20201104 071605

மட்டக்களப்பு தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ இயக்க காரியாலயத்தில் யூலை படுகொலை நினைவேந்தலை செய்வதற்கு எதிராக இயக்கத்தின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ஆகியோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 1983 யூலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி தங்கத்துரை உட்பட 38 பேர் படுகொலை செய்யப்பட்டனர் இவர்களின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 25 ம் திகதி தொடக்கம் 27 ம் திகதிவரை இடம்பெற இருப்பதாகவும் இந்த நினைவேந்தலில் அரசியல்வாதிகள் தொடக்கம் ஆதரவாளர்கள் அதிகமானோர் கலந்து கொள்ளவுள்ளதால் நாட்டில் தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டியதன் முகமாக சுகாதார நடைமுறையை கடைபிடிக்க வேண்டியதன் காரணமாக இந்த நினைவேந்தல் நடைபெறாமல் நிறுத்துவதற்கான நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை மட்டக்களப்பு காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் கோரியதற்கமைய நீதிமன்றம் இருவருக்கும் நினைவேந்தல் செய்வதற்கு தடை விதித்து உத்தரவு ஒன்றே நேற்று சனிக்கிழமை (24) பிறப்பித்து கட்டளை வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.