உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி புதுக்குடியிருப்பு மூங்கிலாறில் போராட்டம்

moonkilaru protest 1
moonkilaru protest 1

றிசாட் பதியுதீன் அவர்களின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பிரதேச மக்கள் இன்று  கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்

உயிரிழந்த சிறுமி கிசாளினிக்கு நீதிகோரியும் சிறுவர்கள் பெண்கள் துஸ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்தக்கோரியும் மூங்கிலாறு பிரதேச மக்கள் கிராமத்தில் இருந்து கோசங்களை எழுப்பியவாறு புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியில் வந்து தங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மூங்கிலாறு தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கிராமத்தில் உள்ள சமூக மட்ட அமைப்புக்களின் பங்கு பற்றலுடன் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜேன்சன் அவர்களும்  கலந்துகொண்டிருந்தார்.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும். சிறுவர்கள் வீட்டுவேலைக்கோ அல்லது ஏனைய வேலைக்கோ அமர்த்தப்படுவது  சட்டரீதியாக அனுமதிக்கக்கூடாது சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி உடனடியாக கிடைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

கிருசாந்தி தொடக்கம் கிசாளினி வரையில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதுவரைக்கும் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எந்த தீர்வும் தண்டனையும் இல்லை இதனை கண்டிக்கும் சட்டம் இல்லை எங்கள் மக்கள் வெளியில் வேலைவாய்ப்பு என்று போகும் வரையில் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மூங்கிலாறு கிராம மக்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் சிறுவரின் உரிமை நீண்டகாலம் மீறப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனை பாதுகாத்து தரவேண்டும் என்று கோரி இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம் என்று கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.