பசறையில் மேலும் 8 பேருக்கு கொரோனா!

202106270221379439 Corona damage to 1049 police SECVPF
202106270221379439 Corona damage to 1049 police SECVPF

பசறை – பிளார்னிவத்தை பகுதியில் மேலும் 8 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

பசறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த தோட்டப்பகுதியில், முன்னதாக கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு இவ்வாறு புதிதாக தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, பசறை – பிளார்னிவத்தை பகுதியில் இதுவரை தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.