இலவச மனித உரிமைகள் சான்றிதழ் கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!

human rights
human rights

யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் நடத்துகின்ற மனித உரிமைகள் சான்றிதழ் கற்கைநெறியின் நான்காவது பிரிவு எதிர்வரும் 06.08.2021 அன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிறது. தற்போதைய கொவிட் 19 பெருந்தொற்றுக்காலத்தின் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு இந்தப் பயிற்சிநெறி கட்டணங்கள் எதுவுமின்றி இலவசமாக நடத்தப்படவுள்ளது.

சமூகப்பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் அரச உத்தியோகஸ்தர்கள் அரச சார்பற்ற நிறுவனப்பணியாளர் போன்றோர் இந்த பயிற்சிநெறியில் இணைந்து கொள்ளலாம். 60 மணித்தியாலங்கள் கொண்ட இந்தச் பயற்சி நெறி வாராந்தம் வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் மாலை 6.30. – 9.30 மணி வரை நடைபெறும். இணையவழியாக (சூம் செயலி வழி) நடைபெறும் பயிற்சிநெறியில் பங்கு கொள்ள விரும்புவர்கள் சுயமாகத் தயாரித்த சுயவிபரக்கோவையுடன் தொடர்பு கொள்ளலாம். நிறுவனத்தின் சிபார்சுக் கடிதத்துடன் இணைந்து கொள்பவர்களுக்கு பதிவுக்கட்டணத்தில் 50% மட்டுமே அறவிடப்படும். ஏனையோர் பயிற்சியில் தங்களைப்பதிவு செய்து கொள்வதற்கு ரூபா 1000 செலுத்துதல் வேண்டும்.

முதல்வரும் நூறு பேர் பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும். மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பயிற்சிகளை வழங்குவார்கள். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலதிக தகவல்களுக்கு 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். எதிர்வரும் 05.08.2021 திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளலாம்.