வாகன விபத்துக்களில் 51 பேர் உயிரிழப்பு

Accident 1 850x460 acf cropped
Accident 1 850x460 acf cropped

கடந்த ஒரு வாரத்தில் வாகன விபத்துக்களினால் 51 பேர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் 385 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் போது 190 பேர் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

மேல், வடமேற்கு, தென் மாகாணங்களில் விபத்துக்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. அத்துடன், புதன், சனி, ஞாயிறு தினங்களில் விபத்துக்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. மாலை 4 மணிக்குப் பின்னரே கூடுதலான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.