முள்ளியவளையில் விபத்தினை ஏற்படுத்திய சொகுசு கார் தப்பிக்க முயற்சி!

ACCDINT 4
ACCDINT 4

05.08.2021 காலை முல்லைத்தீவு முள்ளியவளை நகர் பகுதியில் வீதியின் விதிமுறையினை மீறி தரித்து நின்ற சொகுசு காரின் கதவினை திறக்க முற்பட்ட போது உந்துளியில் பயணித்த இருவர் காரின் கதவில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி மறு பக்கத்தில் பயணித்த நோயாளர் காவு வண்டியில் மோதுண்டு காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த விபத்து தொடர்பில் சம்பவ இடத்தில் நோயாளர் காவு வண்டியின் சாரதி முள்ளியவளை வீதிப்போக்குவரத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய குற்றவாளிகளான அதிசொகுசு கார்காரர்கள் தப்பிக்க முயற்சித்த வேளை நகரில் உள்ள சி.சி.ரிவி கமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன.

சி.சி.ரி.வி காட்சிகளின் படி கார் காரர்களிலேயே விபத்துக்கான காரணம் அமைந்துள்ளமையினை காணக்கூடியதாக உள்ளது காரின் கதவினை திறக்கும் போது பின்னால் வந்த உந்துருளி மோதுண்டு அவர்கள் பயணித்த பக்கத்தினை விட்டு தூக்கி எறியப்பட்ட நிலையில் எதிர் பக்கத்தில் இருந்து வந்த நோயாளர் காவு வண்டியில் மோதுண்டுள்ளார்கள்.

இந்த விபத்து குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில்.. விபத்து குறித்து வீதி போக்குவரத்து காவல்துறையினர் சரியான விசாரணையினை நடத்த வேண்டும் சேவையில் ஈடுபட்ட நோயாளர் காவு  வண்டியின் சாரதியினை கைது செய்துள்ளார்கள் பணம் படைத்தவர்களின் சொகுசு கார் விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது அவர்கள்  தப்பிக்கும் முயற்சிக்கு காவல்துறையினர் துணைபோகக்கூடாது என்றும் நோயாளர் காவுவண்டியின் சாரதி விடுவிக்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.