முல்லைத்தீவு மாவட்டத்தில் 42254 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

IMG 20210805 WA0023
IMG 20210805 WA0023

முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள்  கடந்த 28.07.2021 தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலிஓயா, மல்லாவி, ஒட்டுசுட்டான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் கீழ் 04.08.2021 வரை 42254 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய  சுகாதார சேவைகள் பணிமனையின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்காக 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்  தொடர்ச்சியாக கிராமங்கள் தோறும் மக்களுக்கான  முதற்கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் கடந்த 28.07.2021 தொடக்கம்  04.08.2021 வரை கரைதுறைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11437 பேருக்கும் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11688 பேருக்கும் ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6996 பேருக்கும் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5276 பேருக்கும் வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6857 பேருக்குமாக மாக 42 254 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய  சுகாதார சேவைகள் பணிமனையின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்றைய தினமும்(05-08-2021) வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும்  மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாலிநகர் பாடசாலையிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றிருந்தது இந்நிலையில் நாளை (06-08-2021) மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐயன்கன்குளம் பகுதியில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது