ரிஷாட் வீட்டுக்குள் இருந்த கெமராக்களில் சம்பவம் பதிவாகவில்லை!

ea79be29 cxvff 1
ea79be29 cxvff 1

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சிசிரீவி கெமராக்கள் எவற்றிலும், ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையின் விசேட சிசிரீவி ஆய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று குறித்த கெமராக்களை பரிசோதித்துள்ள போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அவற்றில் இரண்டு கெமராக்கள் செயலிழந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

வீட்டிற்குள் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கெமராக்களே இவ்வாறு செயலிழந்து காணப்பட்டதுடன், அதற்கான காரணம் என்னவென்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

16 வயதான ஹிஷாலினி உயிரிழந்தமை தொடர்பில் இதுவரையில் காவல்துறையினால் 40க்கும் அதிகமான வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மரணித்த சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி இன்றும் மலையகத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நாவலப்பிட்டியில் பெருந்தோட்டப் பிரதேசம் மற்றும் தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டம் போன்ற இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.