தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு பூட்டு

6eeb55ce 8ea0 4cda b62f 279fbf36ea16
6eeb55ce 8ea0 4cda b62f 279fbf36ea16

அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால் சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டுள்ளது.


பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் இவ்வாறு இன்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு மூடப்பட்டது.

5ef76171 8c7f 43b1 a06d 7118fb5c5c02


வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயம் வருடாந்த பெருந்திருவிழா  நாளை மறுதினம்  ஆரம்பமாக உள்ள நிலையில் சுகாதாரக் கட்டுப்பாடுகளின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் திருவிழாக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

b759c240 2ffc 4d04 a4e1 20b762455090


இந்த நிலையில் இன்று நண்பகலுக்குப் பின் சந்நிதி ஆச்சிரமத்தில் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதன்போது கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோரை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து அன்னதானம் வழங்கியதால் பொதுச் சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டது.

0b3fe4c6 d934 4e49 9fdb 49c8e4af49ef


இதேவேளை, ஆலய சூழலில் அமைந்துள்ள கடைகளில் உள்ளோர் பிசிஆர் பரிசோதனை எடுக்கும் வரை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் அறிவுறுத்தப்பட்டது