பேருந்துகளில் அரசு வழங்கும் பாடல்களை மட்டுமே ஒலிபரப்ப முடியும்

bus travaling
bus travaling

பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கிணங்க பயணிகள் பேருந்துகளில் இசைக்கக்கூடிய பாடல்களின் தொகுப்பை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர இதனை அறிவித்துள்ளார்.

பொதுமக்களிடமிருந்து சுமார் 15,000 புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், நீண்ட தூரத்திற்குப் பயணிக்கும் பேருந்துகளில் அதிக இரைச்சலுடன் பாடல்களை ஒலிபரப்புவதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றமையினாலும் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆயிரக்கணக்கான பாடல்கள் அடங்கிய தொகுப்பை அறிமுகப்படுத்தவுள்ளது.

சகல பேருந்துகளிலும் 2020 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அந்தப் பாடல்கள் தொகுப்பையே ஒலிபரப்ப முடியும் என தெரிவித்தார்.