பஸ்கள் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை

a835a40c e66ac951 thilum amunugama 850x460 acf cropped
a835a40c e66ac951 thilum amunugama 850x460 acf cropped

கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை மீறியவகையில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயல்படுவார்களாயின் மீண்டும் பொது போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தும் நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிப்பது உறுதி செய்யப்படுவதுடன் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக பஸ்கள் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயல்பட வேண்டும் என்று அறிவிப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் ​நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அனைத்து பஸ் உரிமையாளர்கள் சங்கங்களும் போக்குவரத்து சேவைக்கான சுகாதார ஆலோசனை வழிகாட்டிகளுக்கு உடன்பட்டுள்ளன. தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் மீறப்படுமாயின் தற்போதைய டெல்டா தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை இடைநிறுத் வேண்டி ஏற்படும். பொது மக்களின் நலனே முக்கியமானது. அதனை கருத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் கூறினார்.