கொழும்பில் வசிப்பவர்களுக்கு இன்றும் தடுப்பூசி செலுத்தப்படும்

163158 corona vaccine reuters1
163158 corona vaccine reuters1

கொழும்பு வாழ் மக்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

30 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளாத கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்றைய தினமும் குறித்த பகுதிக்கு சென்று முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.