திருக்கோணேஸ்வர மாதுமை அம்பாள் தேர் திருவிழா

watermarked WhatsApp Image 2021 04 12 at 22.26.08 1
watermarked WhatsApp Image 2021 04 12 at 22.26.08 1

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் தேர் திருவிழா இன்று (10) நடைபெற்றது.

இன்று காலை 7 மணியளவில் மாதுமை அம்பாள் அழகிய தேரில் எழுந்தருளினார்.

ஆலயத்தை வலம் வந்த தேர் காலை 9 மணியளவில் கோபுர வாசலை அடைந்தது.

மாதுமை அம்பாளுக்கு பச்சை சாத்தி அர்ச்சனை நடத்தப்பட்ட பின்னர் அம்பாள் ஆலயத்திற்குள் எழுந்தருளினார்.

திருவிழா தேர்பவனி கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.