யாழில் பிரபல பல்பொருள் அங்காடி மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

IMG 20210812 WA0054
IMG 20210812 WA0054

யாழ்ப்பாணம்  கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி மீது நேற்றிரவு  (12)  06.40 மணிக்கு  இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால்  பல்பொருள் அங்காடி கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

IMG 20210812 WA0055

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 
கோப்பாய் காவற்துறை பிரிவுக்குற்பட்ட  கல்வியஙகாடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்பொருள் அங்காடி மீது நேற்றிரவு 06.40 மணிக்கு  இலக்கம் மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதோடு அங்காடி கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

IMG 20210812 WA0053

குறித்த சம்பவம் தொடர்பாக பல்பொருள் அங்காடி உரிமையாளரால் கோப்பாய் காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த  கோப்பாய் காவற்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.