நாட்டில் இதுவரை 11,850,308 பேருக்கு கொவிட் தடுப்பூசி

coronavirus 434 1584535871
coronavirus 434 1584535871

நாட்டில் இதுவரை 11,850,308 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், 4,527,502 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (15) மாத்திரம் 27,016 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.