மதுவரி திணைக்களத்தின் திடீர் சோதனையில் 25 சாராயப் போத்தலுடன் ஒருவர் கைது!

kaithu

மதுவரி திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 25 சாராயப் போத்தலுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, கண்டி வீதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கற் முன்பாக நேற்று (20.08) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நேற்று (20.08) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை முடக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக் கொள்வனவு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வவுனியா, கண்டி வீதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கற் ஒன்றிற்கு சென்ற இருவர் 25 சாராயப் போத்தல்களை கொள்வனவு செய்துள்ளனர். 

குறித்த போத்தலை ஒருவருடைய மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு செல்ல முற்பட்ட போது அங்கு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் 25 சாராயப் போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபரை கைது செய்ததுடன், சாராயப் போத்தல்களையும் பறிமுதல் செய்தனர்.

குறித்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள மதுவரித் திணைக்கள அதிகாரிகள், குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.