ராஜித சேனாரத்ன வைத்தியசாலையில் அனுமதி

rajitha
rajitha

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் நேற்றைய தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ராஜித சேனாரத்ன முன் பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது,

இந்நிலையில் ராஜிதவைக் கைதுசெய்வதற்கான அனுமதி கோரி சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.